தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தாதாரர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும், பல்வேறு எழுத்தாளர்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் அதிகமான பிரதி வெளியாகிவருகிறது.
இதழ் கலை, இலக்கியம், ஆன்மீகம், சுற்றுச்சூழல், வாழ்வியல் சார்ந்த கட்டுரைகள் மற்றும் நகரத்தில் நடைபெறும் முக்கியச்செய்திகளை வெளியிட்டுவருகிறது. மேலும் அரசுப் பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களது கட்டுரை, கவிதை, கதை, ஓவியம் போன்ற படைப்புகளை வெளியிட்டு சேவை புரிந்துள்ளது.
மேலும், இராஜபாளையம் நகரில் எழுத்தாளர் இரா.நரேந்திரகுமார், சாகித்திய அகாடமி விருதாளர் பிரபல எழுத்தாளர் சா.தேவதாஸ், இராஜபாளையம் இரமணாலயம் அறக்கட்டளை நிறுவனர் பூ.லோகநாத ராஜா ஆகியோர் உருவாக்கிய சுதந்திர சிந்தனை என்ற அமைப்புடன் இணைந்து தமிழ் எழுத்துலக மாமேதைகள் பலரையும் இராஜபாளையம் நகருக்கு அழைத்து வந்து மாதம் ஒரு இலக்கிய கலந்துரையாடலை நடத்தி, அன்னாரின் அறிவார்ந்த பேச்சினை அப்படியே இரண்டு பக்க அளவில் வெளியிட்டு இலக்கியப் பங்களிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.
அவ்வமைப்புடன் இணைந்து வருடத்திற்கு ஒரு மிகப்பெரிய அளவிலான இலக்கியக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். அத்துடன் வைகறை முரசு சார்பில் அவ்வெழுத்தாளர்களுடனான கலந்துரையாடல்களை புத்தகங்களாக அச்சிட்டு நூல் வெளியிட்டு இலவசமாக கல்லூரி, நூலகங்கள், படிப்பகங்கள், வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் என பலருக்கும் இலவசமாக அளித்துள்ளோம். மேலும் இதுபோன்ற செயல்பாடுகளால் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம்.
பல ஆண்டுகளாக வார இதழாய் வெளிவந்துகொண்டிருந்த இவ்விதழ் ஒரு சில காரணங்களால் தற்சமயம் மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. மீண்டும் வார இதழாய் மலர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும் வைகறை முரசு வாசகர் வட்டம் என்ற வாட்சாப் குழு வாயிஆக இதழை வெளியிட்டு வாசிப்பை ஊக்கப்படுதுகிறோம்.
அடுத்த கட்டமாக வைகறை முரசு வார இதழை மொபைல் செயலியாக வெளியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வாசகர்கள் தங்கள் நல்லாதரவை தொடர்ந்து வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.